இவ்வுலகம் சின்னஞ்சிறு கனவுகளில் இருந்து உருவானது உண்மையான உழைப்பிலிருந்து உருவானது திடமான நம்பிக்கையிலிருந்து நிலையானது இனி கனவுகள் மேம்படட்டும் உழைப்பு உயிராகட்டும் நம்பிக்கை நன்கூரம் பதிக்கட்டும் வாருங்கள் புது உலகம் செய்வோம் உன்னுள் இருக்கும் சக்தியை உற்றுப்பார் உலகம் வளர்த்த தொழில்நுட்பம் கற்றுப்பார் உன் உழைப்பின் ஒரு துளி வியர்வையில் இவ்வுலகம் தாகம் தணிக்கும் உன் அறிவின் ஒரு துளிருக்கு இவ்வுலகம் யாகம் படைக்கும் ஏங்கே கிடக்கும் வா வருங்காலமே இனி விவசாயம் விண்ணிலும் நடக்கும் விண் மீன்கள் மண்ணிலும் படுக்கும் கண்ணுக்கு எட்டும் தூரத்தை கையிலடக்கு விண்ணுக்கு எட்டும் உன் கனவை மன பையில்லடக்காதே மண்ணுக்குள் நீருண்டாம் முன்னோருக்கு நீருக்குள்ளும் மண்ணுண்டாம் முனைவோருக்கு வா வரலாற்றின் சரித்திரத்தையும் மாற்ற...