அவன் விதைத்த விதை தான் இன்று உலகமாய் விளைந்து நிற்கிறது
அக்குது இல்லால் இவ்வுலகம் ஓர் களி மண் உருண்டை
மண்ணோடு இருப்பின் அவனுக்கு கொண்டாட்டம்
அக்குது இல்லால் உன் வயிற்றுக்கு என்றுமே திண்டாட்டம்
செடியிற் நிறமேனோ பச்சை, உழவன் உதிரம் நிறமரியா இயற்கை
மதியை மடியில் உறங்க வைத்துவிட்டு , வயலை வால் மார்ட்டுக்கு விற்பது மனிதன் செயற்கை
மழை போல் அவன் மனம் மகிழ பொழியா விடினும்
களை பிடுங்க ஓர் கை நீட்டி கொடுக்கா விடினும்
உழவன் உலகை பாராட்டு,
இல்லையேல் பார் ஆடிவிடும்
அவன் உழைப்பை கொண்டாடு,
அவனுக்காக மன்றாடு
மண்ணின் மகத்துவம் பேணு, மண்ணை கண்ணாக காணு
உழவனுக்கு உறுதுணை செய்
ஓர் பருக்கை தான் பொன்னென்பது மெய்
எத்தகையனும் எப்பொருளும் எவ்வளவும் ஈட்டினும்
இவ்வித்தகையவன் வளைந்தெடுத்தா ற்தான் உணவு
Comments
Post a Comment