உன் வாக்கு... சாவடி
யார் வந்தால் நமக்கென்ன என்றிருக்க
இது புறம்போக்கு நிலம் அல்ல
இது புறம்போக்கு நிலம் அல்ல
இது அரசாங்கம்
அதில் நீயும் ஓர் அங்கம்
அதில் நீயும் ஓர் அங்கம்
விலைக்காக விற்று செல்ல இது
வணிகமும் அல்ல வியாபாரமும் அல்ல
வணிகமும் அல்ல வியாபாரமும் அல்ல
உன் சுயமரியாதை
விற்றுவிடாதே
விற்றுவிடாதே
வகுப்பறையே காணாதானுக்கு வகுப்பறையில் ஒட்டு
பொது அறிவு அற்றவன் கையில் பொதுமக்கள் பாடு
பொது அறிவு அற்றவன் கையில் பொதுமக்கள் பாடு
பார் புகழ உயர எண்ணும் மாணவனின் கனவும்
எர் பிடுத்து தாழ நிற்கும் உழவனின் வாழ்வும்
வேரோடு அழிய கண்டது போதும்
எர் பிடுத்து தாழ நிற்கும் உழவனின் வாழ்வும்
வேரோடு அழிய கண்டது போதும்
இந்த வாக்குச்சீட்டு
உம் மக்கள் எதிர்காலத்தின் நுழைவுசீட்டு
உனை சுற்றி உள்ள சமூகத்தின் பயணச்சீட்டு
உம் மக்கள் எதிர்காலத்தின் நுழைவுசீட்டு
உனை சுற்றி உள்ள சமூகத்தின் பயணச்சீட்டு
எவர் வந்தாலும் நம் பிழைப்பு இப்படித்தான் என்பது
எவர் வந்தார் என்பது பொறுத்து
எவர் வந்தார் என்பது பொறுத்து
சாதிக்கும் பணத்திற்கும் செவி சாய்த்தது போதும்
சற்று நேர்மைக்கும் அறிவுக்கும் கை கொடுப்போம்
சற்று நேர்மைக்கும் அறிவுக்கும் கை கொடுப்போம்
குடும்ப அரசியலுக்கு கும்மியடித்தது போதும்
பழமைக்கும் மடமைக்கும் பரிகாசம் காட்டியது போதும்
பழமைக்கும் மடமைக்கும் பரிகாசம் காட்டியது போதும்
பொய்மை முன்னும் பொறுப்பின்மை முன்னும் ஊமையாய் இருந்தது போதும்
துரோகம் கண்டும் ஊழல் கண்டும் குருடாய் இருந்தது போதும்
துரோகம் கண்டும் ஊழல் கண்டும் குருடாய் இருந்தது போதும்
செல்லுக வாக்கு சாவடி
உன் வாக்கு
சாதிக்கும் பணத்திற்கும்
பழமைக்கும் மடமைக்கும்
குடும்ப அரசியலுக்கும்
பொய்மைக்கும் பொறுப்பின்மைக்கும்
துரோகத்திற்கும் ஊழலிற்கும்
சாவடி
சாதிக்கும் பணத்திற்கும்
பழமைக்கும் மடமைக்கும்
குடும்ப அரசியலுக்கும்
பொய்மைக்கும் பொறுப்பின்மைக்கும்
துரோகத்திற்கும் ஊழலிற்கும்
சாவடி
--லோகேஷ்
Comments
Post a Comment